மட்டக்குளி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் கூரையை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கொள்ளையிட்ட சந்தேகநபர் ஒருவரை முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் "மோதர சுதா" என அழைக்கப்படும் 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், முகத்துவாரம் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரின் வீட்டில் வைத்தே அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்பொருள் அங்காடியின் பின்புறத்திலுள்ள தகடொன்றைக் கழற்றி உள்ளே நுழைந்துள்ளதுடன், அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களைத் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் சிலவற்றை விற்று, அந்தப் பணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி கோரவுள்ளனர்.


.webp)

.webp)
.webp)







.jpg)