மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் (Padumeen Lions) ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, விசேட விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை, சிரேஷ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜா அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
இந்நிகழ்வில் 306 D10 லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். விசேட அதிதிகளாக துணை ஆளுநர்களான லயன்ஸ் ஹாகீர் அகமட், லயன்ஸ் ரீ. ஆதித்தன் மற்றும் லயன்ஸ் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் மிக முக்கிய அம்சமாக, மாவட்ட ரீதியாகச் செயலாற்றும் ஊடகவியலாளர்களின் சேவையினைப் பாராட்டி அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், கௌரவச் சின்னங்களும் வழங்கப்பட்டன. அத்துடன், கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட முக்கிய உறுப்பினர்களும் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
20 ஆண்டுகால சமூகப் பணியினைப் பூர்த்தி செய்துள்ள பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் இந்த விழாவில், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)











.jpg)