2 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது



மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிட்டியாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

லொறி ஒன்றில் கடத்தி வரப்பட்ட 216,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதை மாத்திரைகள் நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி லொறியில் கடத்தப்பட்ட போதே சிக்கியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.