சுகாதாரத் துறையில் 952 உத்தியோகத்தர்களுக்கு பட்டமளிப்பு !


நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedical) துறைகளில் 952 ஊழியர்களுக்கு டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.

இந்தப் பட்டமளிப்பு விழா இரண்டு முக்கிய அமர்வுகளைக் கொண்டிருந்ததுடன், முதல் அமர்வு பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் (PHM) மற்றும் பொதுச் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்காக (PHFO) மற்றும் டிப்ளோமா பூர்த்தி வழங்கும் வைபவம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கரங்களால் கையளிக்கப்பட்டன. அதன்படி, குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் (PHM) 449, பொதுச் சுகாதார துறை அதிகாரிகள் (PHFO) 77 என 526 உத்தியோகத்தர்களுக்கு டிப்ளோமா பட்டம் கையளிக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வின் போது பாடசாலை மருத்துவ சிகிச்சை சேவைகள் (School Dental Services – SDT), மருந்தாளர் (Pharmacy) மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (Public Health Inspector – PHI) என்ற துறைமுகங்களுக்காக உயர் டிப்ளோமா (Higher Diploma) பூர்த்தி செய்‌‌‌தவர்களுக்கு அமைச்சரின் கரங்களால் வழங்கப்பட்டதுடன், அதன்படி, பாடசாலை பல் மருத்துவர் சேவை உத்தியோகத்தர்கள் (SDT) 39, மருந்தாளர்கள் (Pharmacy) 149, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) 238 என மொத்தமாக 426 பணியாளர்களுக்கு உயர டிப்ளோமா பட்டங்களும் வழங்கப்பட்டன.

டிப்ளோமா பட்டம் கையளிப்பின் போது பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ; நாட்டின் சுகாதார சேவையில் சவால் மிக்க எதிர்கால பயணத்தில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்றார். அந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக திறமையான மற்றும் அர்ப்பணிப்பு உடைய சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை சுகாதார சேவைக்காக அத்தியாவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர் சுகாதாரம் உட்பட பல துறைகளில் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் மற்றும் சர்வதேச புகழை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இந்த புதிய பணியாளர்களின் பொறுப்பு என்றும், தொழில் முன்னேற்றம் நாட்டின் எதிர்கால சுகாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு பாரிய சக்தியாகும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இதன் போது டிப்ளோமாதாரிகளின் தொழில் பொறுப்பை தெளிவுபடுத்திய அமைச்சர் டிப்ளோமா என்பது வெறும் தகுதி மாத்திரமன்றி, தேசிய பொறுப்பை பொறுப்பெடுப்பதாகவும், அந்த தொழிலாளர்களின் நல்ல ஒழுக்கம், பணிவு மற்றும் அர்ப்பணிப்புடன் பொது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளில் மாத்திரம் சுகாதார சேவையை கொண்டு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் சுகாதார சேவையை நவீன மயப்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தரமான சுகாதார சேவை ஒவ்வொரு பிரஜைக்கும் சென்றடைய செய்வதற்காக விசேட முதலீடு மேற்கொள்ளப்படுவதாகவும், சுகாதார கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அவசியமான ஆளணி வளத்தை அபிவிருத்தி செய்தல், தொழிலாளர்களுக்கு தமது துறையில் தொடர்ந்து பயிற்சி மற்றும் அறிவை வழங்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கு அவசியமான பயிற்சிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறே துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஆகியோர்களுக்காக மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டமொன்றை இந்த வருடத்தில் விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.