
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரு நெத்திகுமார் தெரிவித்தார்.
இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு, இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரு நெத்திகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





.jpg)






