அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை





நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) திங்கட்கிழமை நண்பகல் 'அம்பர்' நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்றைய தினம் நண்பகல் முதல் இரவு 11:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

இடி முழக்கத்தின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள்போன்றவற்றைக் தவிர்த்துக் கொள்ளவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

துவிச்சக்கரவண்டிகள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.