சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை (15) வரை நாட்டில் சில பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (07) நண்பகல் சுமார் 12:13 மணியளவில் தெஹிவளை, மஹரகம, பாதுக்கை பன்னிபிட்டிய, எஹெலியகொட, மஸ்கெலியா, சியம்பலாண்டுவ, பொத்துவில் ஆகிய பகுதிகளுக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.
சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகளில், நண்பகல் வேளையில் நிழல்கள் மிகக் குறைவாகவே காணப்படும் மற்றும் பகல் நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சூரியனின் இந்த வடக்கு நோக்கிய நகர்வு தொடர்வதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலைமை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


.jpg)









