எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் !


தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம் நேற்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி நேற்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று மேற்கொள்ளப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் கூறினார்.