
மவுண்ட் லவினியா (mount lavinia) பகுதியில் மது போதையில் ஒழுங்குக்கேடாக நடந்து கொண்டு இலங்கைப் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் திகதி இரவு சுமார் 11.50 மணியளவில் மவுண்ட் லவினியா (mount lavinia ) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு உணவகத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததாவது, மது போதையில் இருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் அங்கு இருந்த இலங்கைப் பெண்ணை தாக்கியுள்ளார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மவுண்ட் லவினியா பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் சுமார் 12 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வருவதாகவும், சம்பவம் நடந்த போது அங்கு இருந்த அவரது சுமார் 14 வயதுடைய இரு குழந்தைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கைப் பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.












.jpg)