கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை


நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் வெளியிடப்பட்டதுடன், இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

இடி முழக்கத்தின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள்போன்றவற்றைக் தவிர்த்துக் கொள்ளவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

துவிச்சக்கரவண்டிகள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.