முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சகோதரர், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணுக்கேணி பகுதியில் வசிக்கும் சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கைக்கலப்பாக மாறிய நிலையில், சகோதரர் ஒருவர் தனது சகோதரியைக் கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த சகோதரி, அப்பகுதியில் கிராம அலுவலராகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சகோதரி மீது தாக்குதல் நடத்திய பின்னர், அதன் விளைவுகளுக்குப் பயந்து குறித்த சகோதரர் வீட்டை விட்டுத் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்களாக அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், குமுழமுனையில் உள்ள அவர்களது வீட்டுத் தோட்டத்துக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் நீண்டகாலமாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகிச் சிகிச்சை பெற்று வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் , இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.













.jpg)