உயர் கல்வியில் முன்னேற்றம் காட்டும் இலங்கை !



இலங்கையில் கடந்த ஒரு தசாப்தத்தில் உயர் கல்வி பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, 2024 மக்கள் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின் 25 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கான தரவுகள் தெரிவிக்கின்றன.

அறிக்கையில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

PhD பட்டதாரிகள் – 2012இல் 6,557 இருந்தது 2024இல் 11,757 ஆக உயர்வு (மொத்த மக்கள் தொகையில் 0.1% மட்டும்)
பட்டப்படிப்பு பெற்றோர் – 358,052 (3.0%) இலிருந்து 780,958 (5.6%) ஆக இரட்டிப்பு அதிகரிப்பு
உயர் கல்வி பெற்றோர் – 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக உயர்வு
A/L அல்லது சமமான தகுதி – 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரிப்பு
இரண்டாம் நிலைக் கல்வி – 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்வு (சுமார் 58%)
அடிப்படை கல்வி மட்டும் – 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக குறைவு
கல்வி பெறாதோர் – 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆக குறைந்துள்ளது