
அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரணாயக்க பொலிஸாருக்கு நேற்று (25) திங்கட்கிழமை கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட ஹொரணை மற்றும் கலகெடிஹேன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அரநாயக்க பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.






.jpeg)





