மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு



சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதையும், பிரதேச கலாசார மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பரவலாக்கி அவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையானதொரு நூலகமாக இதன் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (20) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமாரவினால் கையளிக்கப்பட்டது.

அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் என்ற வகையில் நாம் நம்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.