09 மணித்தியாலங்களில் கம்பஹாவில் 142 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு..


நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (14) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையான காலப்பகுதியில்,

கம்பஹா மாவட்டத்தில் கம்பஹாவில் 142.0 மிமீ, கிரிந்திவெல 108.0 மிமீ, கேகாலை மாவட்டத்தில் மாலிபொட 104.0 மிமீ, அவிசாவளை, பென்ரித்தோட்டம் 100.5 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே மிக அதிகளவாக 142 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, கம்பஹா மற்றும் அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ளது. அத்துடன் கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானாமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.