நாடளாவிய ரீதியில் அடைமழை: 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை


 நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையினால் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இன்று (14) வியாழக்கிழமை மாலை 4:00 மணி முதல் நாளை (15) வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட எச்சரிக்கை (Level 2 - Amber Alert)

பின்வரும் மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

காலி மாவட்டம்: நெலுவ

களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பதுரலிய, மத்துகம, ஹொரனை, வலல்லாவிட்ட

குருநாகல் மாவட்டம்: அலவ்வ

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல, இரத்தினபுரி

முதலாம் கட்ட எச்சரிக்கை (Level 1 - Yellow Watch)

அதேவேளை, பின்வரும் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட 'மஞ்சள்' நிற (அவதானக் குறிப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

கொழும்பு: சீதாவக்கை

கண்டி: பாதஹேவாஹெட்ட, பாஸ்பாகே கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, பான்வில, யடினுவர, கங்க இஹல கோரலே, உடபலாத்த, பூஜாபிட்டிய, தும்பனை, தெல்தொட்ட, தொலுவ, உடுனுவர, ஹதரலியத்த, ஹரிஸ்பத்துவ

நுவரெலியா: நோர்வூட், அம்பாகமுவ கோரளை, கொத்மலை மேற்குகேகாலை: மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தொட்டை, அரநாயக்க, கேகாலை, ரம்புக்கணை, வரக்காபொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல

காலி: தவலம, எல்பிட்டிய, நியகம

களுத்துறை: இங்கிரிய, புலத்சிங்கள

மாத்தறை: பிட்டபெத்தர

மாத்தளை: நாவுல, அம்பன்கங்க கோரலே, ரத்தோட்ட

குருநாகல்: நாரம்மல, ரிதிகம

பதுளை: பண்டாரவளை, ஹாலி-எல, பசறை

மொனராகலை: வெல்லவாய, படல் கும்புர, பிபிலை

இரத்தினபுரி: எஹலியகொடை, குருவிட்ட, கலவானை, கொடகவெல்ல, கிரியெல்ல, அயகம