.jpeg)
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தியினால் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள 20/CGES26/09 இலக்க உத்தியோகபூர்வ கடிதத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. சூறாவளிப் பாதிப்பினால் மீள்குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களில் கணிசமானோர் இதுவரை தமது விருப்பத்தையோ அல்லது முடிவையோ அறிவிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
எனவே, இதுவரை தீர்மானத்தை அறிவிக்காத குடும்பங்கள் எதிர்வரும் 2026 ஜூன் 15 ஆம் திகதிக்குள் அதனைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்தத் திகதிக்குப் பின்னரும் தமது முடிவை அறிவிக்கத் தவறும் குடும்பங்களுக்கு, முழுமையான வீட்டு நஷ்டஈடு வழங்குவது அல்லது மீள்குடியேற்ற வசதிகளைச் செய்து தருவது போன்ற விடயங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)