
அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அதனை அண்டிய பல பிரதேசங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் "சிறிய அளவிலான வெள்ள அபாய" எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல
மஹர, கம்பஹா, மினுவாங்கொட
ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வீதிகளில் பயணிப்போர் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)