
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைமாறும் பகுதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை (13) பெய்த கடும் மழை காரணமாக வெலிபென்ன இடைமாறும் பகுதியின் அளுத்கம - மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியது.
இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி கொழும்பு நோக்கிய நுழைவாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில், காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
வெள்ள நீர் வழிந்தோடியதை அடுத்து, போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக குறித்த வீதிகள் அனைத்தும் தற்போது மீண்டும் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.






.jpg)


.jpeg)
.jpg)
.jpg)
