போதைப்பொருள் கடத்தல்காரர் 'எல்டோ தர்மே' கைது


பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினரான 'எல்டோ தர்மே' என்பவர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் இவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'எல்டோ தர்மே' என்பவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.