.jpeg)
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக, அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.
அட்டன் பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் மண்பரிவு அபாயம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹட்டன் வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை இயங்காது என்பதுடன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)