.jpeg)
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரிசெதகம பகுதியில் நேற்று புதன்கிழமை (13) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சிரிசெதகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிரில்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)


.jpeg)
.jpg)
.jpg)
