தெமட்டகொடையில் துப்பாக்கிகள் மீட்பு - 4 பேர் கைது..


 தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.