மின்சார சேமிப்பு கட்டமைப்பு இலங்கையில் முதன்முறை வவுனியாவில் புதிய திட்டம் ஆரம்பம்
மின்சாரத்தை சேமித்து நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்தும் திட்டம் இலங்கையில் முதன் முதலாக வவுனியாவில் ஆரம்பம்!
மின்சாரத்தை சேமித்து நெருக்கடியான நேரங்களில் பகிரத்தக்க சேமிப்பு கட்டமைப்பை இலங்கையில் நிறுவும் திட்டத்தின் கீழ் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் மின்கலக் கட்டமைப்பை நிறுவும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தினால் நுகர்வுக்கு மேலதிகமான மின்சாரத்தினை சேமித்து வைத்து பயன்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன் முதலாக இந்த செயற்திட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













