
சடலம் கரையொதுங்கியிருப்பதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், சடலம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் உயிரிழந்த நபரின் உடலில் இடது பக்க மார்பு, வலது தோள்பட்டை, வலது முழங்கைக்குக் கீழ்ப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் ஆகிய இடங்களில் பச்சை குத்தப்பட்டுள்ளது என்றும் உயிரிழந்த நபரின் இடது பக்க காதில் சிலுவை அடையாளம் கொண்ட காதணி அணியப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலமானது சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உடப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



.jpg)








