
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோதமான முறையில் நுழைந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, அங்கிருந்த முக்கிய அரசாங்க ஆவணங்கள் மற்றும் கோப்புகளை சேதப்படுத்தியுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச செயலகக் கட்டிடத்திற்குள் புகுந்த கும்பல், அங்குள்ள மூன்று மாடிகளுக்கும் சென்று, அங்கிருந்த அலுவலக மேசைகள் மற்றும் ஆவணக் காப்பகங்களை உடைத்து, பொதுமக்களின் விபரங்கள் அடங்கிய முக்கிய கோப்புகளை கிழித்து விநாசம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பண்டாரவளை பிரதேச செயலக அதிகாரிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பொதுச் சொத்துக்களுக்கும் ஆவணங்களுக்கும் சேதம் விளைவித்தவர்களை அடையாளம் காண்பதற்காக, அப்பகுதியில் உள்ள சிசிரிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பண்டாரவளை பொலிஸார் விசேட விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpg)



