தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் வாக்குமூலத்தின் மூலம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றல்!


 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றையும் தோட்டாக்களையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (22) மதியம் மீட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியும், 09 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 05 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 19ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 01