கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!




மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நீரில் மூழ்கிய நபரை பிரதேசவாசிகள் மீட்டு உடனடியாக மெதகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரத்தனதெனிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்கள் சிலருடன் கும்புக்கன் ஆற்றுக்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் மெதகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.