
கண்டி, ஹந்தானை பிரதேசத்திலுள்ள கித்துல்முல்ல பெருந்தோட்ட மேற்பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில் மூவர் பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவிகள் கொட்டியதில் மூவர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய தொழிலாளி ஆவார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.




.jpg)




.jpg)


