
யக்கல பகுதியில் சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் 65 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீரகுல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இணையத்தளம் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து மின்-சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)








