புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பலியிடப் போவதில்லை - உதய கம்மன்பில

புலிகள் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டுக்காகப் போராடிய சுரேஷ் சலேயைப் பலியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேயைப் பாதுகாப்பதற்காக, இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.