
வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (02) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் காளி கோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இளைஞர் ஒருவர் இயக்கிய போது அதற்குள் தவறி வீழ்ந்த இளைஞன் உயிரிந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)




.jpg)


