திருடிய புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது!


விகாரையிலிருந்து திருடிய புராதன புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய கண்டிக்கு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜ மகா விகாரையிலிருந்து இவை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழமையான மேற்படி புத்தர் சிலையை விற்பனை செய்ய இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த துறவி ஒருவரும் உடந்தையாக இருந்த மூன்று பேரும், புத்தர் சிலை மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்துடன் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.