
கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் காணாமல்போயுள்ள 20 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின்படி, காணாமல்போன பெண்ணின் கணவரால் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவி குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண் காணாமல்போன சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், இதுவரை இந்த பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறாததால், இப்பெண் தொடர்பான ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தங்களுக்குத் அறியத்தருமாறு பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெண் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாகக் கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்துக்குத் தொடர்புகொண்டு விபரங்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
கைபேசி எண்: 071 8591060
தொலைபேசி எண்: 081 2571222






.jpg)


.jpeg)


.jpeg)