பெரியகல்லாற்றில் தனக்கான ஆலயத்திற்கான இடத்தை வெளிப்படுத்தி விருப்புடன் அமர்ந்து கொண்டு மெய்யடியார்களுக்கு அருள்பாலித்து வரும் கடல் நாச்சியம்மன் வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு பக்தி பூர்வமாக இன்று திங்கள் (01) அதிகாலை திருக்கதவு திறத்தலுடன்ஆரம்பமானது.
காலை 9.00 மணியளவில் பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதான வீதியூடாக ஆரம்பமான பாற்குடபவனி விநாயகர் வீதியூடாக ஊடறுத்து கடலம்மன் ஆலயத்தை வந்தடைந்து அங்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மாலை அன்னையின் முகக்களை பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பறவைகாவடி உட்படபலவகை காவடிகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் அணிவகுத்து பக்தி பூர்வமான ஊர்வலம் தெருவெல்லாம் வீட்டுக்கு வீடு நிறை குடங்கள் வரவேற்க ஆலயத்தை வந்தடையும். அதைத் தொடர்ந்து நள்ளிரவு அதி முக்கிய நிகழ்வான பூரண கும்பம் நிறுத்துதல் நடைபெற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடியார்களின் பொங்கல் படைக்கப்பட்டு இந்து சமுத்திரத்தில் கும்பம் சொரிதலுடன்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுறும்.


.jpeg)
.jpeg)








.jpg)



.jpg)

