பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!


எந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஹல்வத்துர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மதியம், எந்தான பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 101 லீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் நுகவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் எந்தான பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.