ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முன்தினம் சஹ்ரான் சங்கிரில்லா ஹோட்டல் அறையிலே தங்கி இருந்தார். அவரது அறை இலக்கம் 116. அந்த அறைக்கு அவரும் அவருடன் இருந்த நபரும் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவிலே வந்துள்ளார். மறுநாள் 21ஆம் திகதியே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் இரு வாரத்துக்கு முன்னர் தங்கி இருந்த அனைவரது தகவல்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
ஆனால் சஹ்ரான் தங்கியிருந்த அறையில், சஹ்ரானுக்கு முன்னர் யார் தங்கி இருந்தார்கள் என்ற தகவல் மாத்திரம் இல்லை. அவ்வாறு பதிவு செய்யாமல் யாருக்கு அவ்வாறு ஹோட்டல் அறைகள் வழங்கமுடியும்.? முக்கிய பிரமுகர்களுக்கே வழங்க முடியும்.
அப்படியானால் அந்த முக்கிய பிரமுகர்கள் யார்? இந்த தகவல்கள் வழக்கு விசாரணைகளின்போது வெளியில் வந்த விடயங்கள். அதனால் இதுதொடர்பாகவும் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.
அத்துடன் சஹ்ரான் இருந்த அறையின் கதவை திறப்பதற்கு இலத்திரணியல் அட்டை விநியோகிக்கப்பட்டும் இருக்கிறது. அதனை பயன்படுத்தி கதவை திறந்தும் இருக்கிறது.
இந்த விடயங்கள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் யார் இருந்தார்கள் என்பது தெரியாது. அப்படியானால் அங்கு இருந்தவர்கள் யார். அதேநேரம் ஹோட்டல்களில் பதிவு செய்யாமல் தங்கும் சிலர் உலகில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மாத்திரமே அவ்வாறான சலுகை இருக்கிறது. அவர்கள் முக்கிய பிரமுகர்களாக இருக்கலாம். அதனால் அவர்கள் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். இவ்வாறான இன்னும் பல விடயங்கள் விசாரணைகளில் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.




.jpg)








