
மீரிகம பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாகச் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதுண்டதில் காயமடைந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரிகம - திவுலப்பிட்டிய வீதி ரேந்தபொல பகுதியில் நேற்று பிற்பகல் ற்படி விபத்து சம்பவித்துள்ளது. மீரிகம நோக்கி பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக நடந்து சென்ற பெண் மீது மோதி, பின்னர் தொலைபேசி கம்பம் ஒன்றிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிவள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ரேந்தபொல, மீரிகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




.jpg)





.png)

