
சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு வர்த்தகப் பெயர்களைச் சேர்ந்த 36,200 சிகரெட்டுகளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சினமன் லைஃப் (Cinnamon Life) ஹோட்டலின் வாகனத் தரிப்பிடத்தில் ஜூலை 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட வேளையில், குறித்த சிகரெட்டுகள் போக்குவரத்துக்காக ஒரு கெப் (Cab) வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அந்த வாகனமும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வயதுடைய சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







.jpg)

.jpg)
.jpg)


