வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இருவரும், ஜூலை 25ஆம் திகதி எமிரேட்ஸ் EK652 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பசுமை வழித்தடத்தில் (Green Channel) மேற்கொள்ளப்பட்ட சோதனையில், எட்டு பயணப்பைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த 12 உலோகக் கூண்டுகளில் 64 புறாக்கள் மறைத்து கொண்டு வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 8 புறாக்கள் உயிரிழந்திருந்ததாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பறவைகளின் மொத்த பெறுமதி ரூ.34,31,400 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு ரூ.4 இலட்சமும் மற்றொருவருக்கு ரூ.1 இலட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிருடன் இருந்த புறாக்களை மீண்டும் இத்தாலிக்கு அனுப்ப சுங்கத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.






.jpg)


.jpg)


.jpg)

