இதுதொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.
நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே கருத்தில் கொள்கிறோம் என்பதால், இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன.
எனவே, அந்த எஞ்சிய நாட்களில் உலகச் சந்தையில் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே நாங்கள் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக பீப்பாயொன்று 100 டொலரை எட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்றங்கள் தீவிரமடைந்ததாலும், செங்கடலில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க சவூதி அரேபியா பயன்படுத்தும் பிரதான கப்பல் பாதையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியதாலும், உலகளாவிய பிரதான கச்சா எண்ணெய் விலைக் குறியீடான பிரென்ட் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






.jpg)

.jpg)





