சுங்காங்கேணியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று (06) திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசி விட்டு வீடு திரும்பியவர் சம்பவ தினமான இன்றைய தினம் காலையில் சென்று வீசிய வலை மீட்டு மீனை பிடிப்பதற்காக சென்றவர் பகல் ஆகியும் வீடு தீரம்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இதன் போது குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், குறித்த நபருக்கு வலிப்பு நோய் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)



.jpg)



