வரலாற்றுச் சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப்பை அரசாங்கமும் பொலிஸ் துறையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனசெத பெரமுன கட்சியின் தலைமைச் செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை கருத்தில் கொண்டு, வரலாற்றுப் புண்ணிய தலங்களின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம் என்றார்.
குறிப்பாக கதிர்காமம் நிலமே மற்றும் தேவேந்திரமுனை விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆகியோரின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தேவேந்திரமுனை, கதிர்காமம் மற்றும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பெரஹரா உள்ளிட்ட தேசிய பாரம்பரிய மத நிகழ்வுகள் தொடர்பாக தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புத்த சாசனத்திற்கும் அதன் பாரம்பரிய கலாசார விழுமியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.





.jpg)





.jpg)


