
சாசனரக்ஷக சங்க சபையின் ஆளும் சபை உறுப்பினரான வண. அகலகட சிறிசுமன தேரர், பௌத்த பிக்குகளை அவமதிப்பதற்கும், அவர்கள் சமூகத்தில் செயற்பாட்டுடன் ஈடுபடுவதைத் தடுக்கவும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திங்கட்கிழமை (27) குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் சாசனரக்ஷக சங்க சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுக சங்கஸ்ஸ சமக்கி" (Sukha Sanghassa Samaggi) சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் கீழ் புத்தசாசனத்தை பாதுகாத்து வளர்ப்பதற்கான அரசின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும் முக்கிய பங்காற்றியதாக மகா சங்க மாநாட்டில் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
மகா சங்க மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பௌத்த பிக்குகள் தமது வரலாற்றுப் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கவில்லை என குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், எமது காவி உடை தன் வரலாற்றுப் பொறுப்பையும் கடமையையும் தொடர்ந்து நிறைவேற்றியது. நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்புவதில் பிக்குகளின் தியாகம் முக்கியமானதாக அமைந்தது” என அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்தார்.
நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மகா சங்கத்தினர் நீண்டகாலமாக வகித்து வரும் பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்திலும் நாட்டின் நலன், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் மகா சங்கம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் சங்கம் ஒன்றுபட்டாலே சிலர் பதற்றமடைந்து, உடனடியாக எங்களை தாக்கவும், அவமதிக்கவும் பிரசாரங்களை ஆரம்பிக்கின்றனர், என்றார்.
"வெளிநாடுகளில் இருந்து இயங்கும் சில சக்திகளும், அவர்களது நிதி மற்றும் சித்தாந்தங்களை சார்ந்து செயல்படுபவர்களும் ஆட்சியில் இருப்போர்மீது செல்வாக்கு செலுத்துகின்றனர். அந்தக் குழுக்கள் பௌத்த பிக்குகளுக்கும், நாட்டின் கலாசார பாரம்பரியத்திற்கும் எதிரான மனப்போக்குடன் செயற்படுகின்றன," என குற்றம்சாட்டினார்.
"இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிக்குகள் சாலைகளில் கூட சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் உருவாகலாம். நாம் இனி மௌனமாக இருக்கக் கூடாது. அரசாங்கத்தை கவிழ்க்கவோ, ஆட்சியாளர்களை பதவியிலிருந்து அகற்றவோ நாம் இங்கு வரவில்லை. எங்களை நோக்கி விடுக்கப்படும் சவால்களுக்கு எதிராக ஒன்றிணைந்து எமது பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம்," என்று தெரிவித்தார்.




.jpg)





.jpg)


