
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும், சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், நாட்டின் சில பகுதிகளிலும் கடற்பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பாக மீனவர்களும் பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





.jpg)

.jpg)





