மொனராகலை - ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1,044 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் 54,096 கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை (22) ஹம்பேகமுவ, கோமகல பகுதியில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சுற்றிவளைப்பின்போது 1,044 கிலோ 180 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு சுற்றிவளைப்பில் 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடைய எதம்பலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





.jpg)
.jpg)
.jpg)



.jpg)
