கல்கிசையில் ரூ. 2.4 கோடி பெறுமதியான தங்க நகைகள், பணம் திருட்டு – சந்தேகநபர் கைது
கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேகநபர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து கல்கிசை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகை வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்த முறைப்பாட்டாளர், கடந்த 18ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வீடு திரும்பியபோது திருட்டு இடம்பெற்றிருப்பதை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்து திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.





.jpg)
.jpg)
.jpg)



.jpg)
