இலங்கையில் 5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் !


இந்த ஆண்டில் இதுவரை 280 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடு செல்ல  சம்பளமில்லா விடுப்பு (No-Pay Leave) பெற விண்ணப்பித்துள்ளதாக பிரதி  சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் 19 ஆம் திகதி வரை, 1,429 மருத்துவ அதிகாரிகளும் மற்றும் 140 விசேட மருத்துவ நிபுணர்களும் வெளிநாடுகளில் சம்பளமில்லா விடுப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் எஸ்.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 2020 முதல் 2025 வரை மொத்தம் 3,791 மருத்துவர்கள்  வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறினார்.

இவர்களில் பெரும்பாலானோர் மேற்படிப்புகளை (Postgraduate Studies) தொடரும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பிரதிச் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.