மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உணவு பாதுகாப்பு நடவடிக்கை தொடரபாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தீவிரமா நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீர்திகா மதனலகன் (Dr. Keerthika mathanalakan) தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் சின்னத்தம்பி திருனவன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எஸ்.கிஷாந்தராஜா, செ. தவவேந்திரராஜா, சோ.அமுதமலன் இணைந்து உணவு கையாளும நிலையங்களில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஏழு (07) நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (21) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் ஏழு உணவு நிலையங்களில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்ட இரண்டு உணவகங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 09.09.2026 வரை மூடுவதற்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு மொத்தமாக ஒரு இலட்சத்து பத்து ஆயிரம் ரூபா (110,000) அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
உணவு கையாளும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





.jpg)
.jpg)
.jpg)



.jpg)
