பொலிஸ் நிலையத்துக்கு வரும் மக்களிடம் இருந்து முறைப்பாட்டுப் பிரதிகள், ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சைரன் குழாய்களுக்கான கட்டணங்களை வாங்கியபோது, அதற்கான உரிய பற்றுச்சீட்டுகளை வழங்காமல் இந்த பணத்தை அவர் கையாடல் செய்துள்ளமை பொலிஸ் உள்நாட்டு கணக்காய்வுப் பிரிவின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு பற்றி அறிந்ததும், கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மனவின் உத்தரவின்பேரில், கண்டி விசேட குற்றத் விசாரணைப் பிரிவினர் உடனடியாக விசாரணை நடத்தி அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் வெறும் ரூபா 5,010 மட்டுமே பொலிஸ் பெட்டகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாக்க மற்றும் உயரதிகாரிகளின் மேற்பார்வையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.


.jpg)

.jpg)






.jpg)

